spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டிராகன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

‘டிராகன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிராகன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.'டிராகன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஸ்கின், ஜார்ஜ் மரியான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகின்றன. 'டிராகன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!இதன்படி படம் வெளியான 10 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதே சமயம் இந்த படத்தினை இயக்குனர் சங்கர், கார்த்திக் சுப்பராஜ் போன்ற திரைப் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.'டிராகன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

we-r-hiring

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் இது தொடர்பாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், ரஜினி தன்னை அழைத்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “நல்ல படம் பண்ண வேண்டும். படத்தைப் பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு அழைத்து வாழ்த்த வேண்டும். நம்ம படத்தை பற்றி பேச வேண்டும். இது எல்லாம் இயக்குனராக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒவ்வொரு உதவி இயக்குனர்களின் கனவு. என் கனவு நிறைவேறிய நாள் இன்று” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ