Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்குப் பிறகு இமயமலைக்கு புறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமயமலைக்கு புறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

-

ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு புறப்பட்டுள்ளார்.

ரஜினி தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் மோகன்லால், தமன்னா, சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ள இப்படம் நாளை பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 4 வருடங்களுக்கு பிறகு இமய மலைக்கு புறப்பட்டு உள்ளார். இதுகுறித்து இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி ” கொரோனா காலகட்டத்தினால் இமய மலைக்குச் செல்ல முடியவில்லை. 4 வருடங்களுக்கு பிறகு இமய மலைக்கு செல்கிறேன்.

அதைதொடர்ந்து செய்தியாளர்களிடமிருந்து ஜெயிலர் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்த்து சொல்லுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ