- Advertisement -
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கு திரையுலகில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவர் நடிப்பு மட்டுமன்றஇ அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யானின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டது
https://x.com/i/status/1800769850773848191

நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 21 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்காக போட்டியிட்ட 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்டு, சுமார் ஒரு லட்சத்து, 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்ச்சி போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளரை வென்றார்.
https://x.com/i/status/1800760906642595854