spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

‘சூர்யா 44’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தை முடித்துள்ளார். இந்த படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சமீப காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. 'சூர்யா 44' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?இதைத் தொடர்ந்து புறநானூறு படத்தில் நடிக்க இருந்த சூர்யா ஒரு சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிப்போகிறது. எனவே நடிகர் சூர்யா தனது 44 வது படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம்
ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.'சூர்யா 44' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? அடுத்ததாக இதில் வில்லனாக உறியடி விஜய்குமார் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சூர்யா 44 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இதன் பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டைட்டில் அடுத்த மாதம் (ஜூலை 23) சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ