நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்பாக கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தாலும், சூர்யா சிங்கிளாக நடித்த திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எனவே ரசிகர்களும் பெரிய அளவில் சூர்யா படத்திற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
Let’s make a wish 💥
Tonight, 12:12 AM IST. Stay tuned! #Suriya44#LoveLaughterWar ❤️🔥 #AKarthikSubbarajPadam📽️ @Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @stonebenchers pic.twitter.com/NQpYb34ppN
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 22, 2024
இந்நிலையில் சூர்யா நாளை (ஜூலை 23) தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். எனவே சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் நள்ளிரவு 12.12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.