சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. அதே சமயம் இவர், வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படமானது சூர்யாவின் 46வது படமாகும். எனவே தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அப்டேட்டை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவே கொடுத்திருந்தார். இதற்கிடையில் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படத்தை விரைவில் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இவ்வாறு இப்படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைக்கின்றது. அதாவது இப்படம் தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமை கிட்டத்தட்ட ரூ. 85 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் அதனை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சூர்யாவிற்கு, சூர்யா 46 படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஜாக்பாட் அடித்து விட்டது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சூர்யாவுக்கு அடித்த ஜாக்பாட் …. படப்பிடிப்பு தொடங்குவதற்குள் பல கோடி ரூபாயை குவிக்கும் ‘சூர்யா 46’!
-
- Advertisement -