Homeசெய்திகள்சினிமாஅம்பானி இல்லத் திருமண விழாவில் ஜொலிக்கும் சூர்யா - ஜோதிகா!

அம்பானி இல்லத் திருமண விழாவில் ஜொலிக்கும் சூர்யா – ஜோதிகா!

-

- Advertisement -

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்த நிகழ்வு மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் தற்போது இருவரின் திருமணமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அம்பானி இல்லத் திருமண விழாவில் ஜொலிக்கும் சூர்யா - ஜோதிகா! அம்பானி வீட்டு திருமண விழாவிற்காக மும்பை விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த திருமண விழாவிற்கு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பலத்திரை பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். மேலும் தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் ஷாருக்கான், சல்மான் கான், அட்லீ, விக்னேஷ் சிவன், நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோரும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். அம்பானி இல்லத் திருமண விழாவில் ஜொலிக்கும் சூர்யா - ஜோதிகா!இவர்களுடன் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகா இருவரும் இணைந்து ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அம்பானி இல்லத் திருமண விழாவில் ஜொலிக்கும் சூர்யா - ஜோதிகா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர். அடுத்ததாக இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க உள்ளார்கள் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ