Homeசெய்திகள்சினிமா'அமரன்' படக்குழுவினரை வாழ்த்திய சூர்யா- ஜோதிகா!

‘அமரன்’ படக்குழுவினரை வாழ்த்திய சூர்யா- ஜோதிகா!

-

- Advertisement -

சூர்யா – ஜோதிகா தம்பதி அமரன் படக்குழுவினரை வாழ்த்தி உள்ளனர்.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்களில் அமரன் திரைப்படமும் ஒன்று.'அமரன்' படக்குழுவினரை வாழ்த்திய சூர்யா- ஜோதிகா! இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தினை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் தற்போது வரை கிட்டத்தட்ட 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது முகுந்த் வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அதாவது அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்றே சொல்லலாம். இவ்வாறு இந்த படம் ரஜினி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

MUST READ