- Advertisement -
பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹெய்ஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படமானது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் காணொலி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஜப்பான் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. டப்பிங் தொடர்பாக படக்குழு வெளியிட்ட வீடியோ 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.
Karthi’s #Japan Trailer Launch Tomorrow at Nehru Stadium, Chennai.
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 27, 2023