- Advertisement -
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும், கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இத்தொடரில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
