கருப்பு படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அடுத்தது ‘கருப்பு’ திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்க திரிஷா, யோகி பாபு, நட்டி நடராஜ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விரைவில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த படம் எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி கருப்பு திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆகையினால் படக்குழுவும் இது தொடர்பான அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூர்யாவின் 45வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


