spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஏகே 64' படத்தில் இணையும் சூர்யா பட நடிகை.... லேட்டஸ்ட் அப்டேட்!

‘ஏகே 64’ படத்தில் இணையும் சூர்யா பட நடிகை…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

சூர்யா பட நடிகை ஒருவர் ஏகே 64 படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.'ஏகே 64' படத்தில் இணையும் சூர்யா பட நடிகை.... லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கிறார். அதே சமயம் ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படம் எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்காலிகமாக ஏகே 64 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்க போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன.'ஏகே 64' படத்தில் இணையும் சூர்யா பட நடிகை.... லேட்டஸ்ட் அப்டேட்! அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மோகன்லால், ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. தற்போது நடிகை சுவாசிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது தெற்கு தமிழக துறைமுக பின்னணியில் எடுக்கப்படும் ஒரு ஆக்சன் என்டர்டெயினர் படமாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ