spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாபெரும் வெற்றி பெற்ற அந்த இந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா..... இயக்குனர் பகிர்ந்த தகவல்!

மாபெரும் வெற்றி பெற்ற அந்த இந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா….. இயக்குனர் பகிர்ந்த தகவல்!

-

- Advertisement -

மாபெரும் வெற்றி பெற்ற அந்த ஹிந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா..... இயக்குனர் பகிர்ந்த தகவல்!2018 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் “அந்தாதுன்”. இப்படத்தில் நாயகனாக ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியிருந்தார். 32 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி 450 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. படத்தின் முதல் நாள் வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் படத்தில் கன்டென்ட் ஸ்ட்ராங்காக இருந்ததால் அடுத்தடுத்த நாட்கள் வசூல் எக்கச்சக்கத்திற்கு எகிரி இந்த சாதனையை படைத்தது. இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் அடுத்த படமாக விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் “மெரி கிறிஸ்மஸ்” திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. மாபெரும் வெற்றி பெற்ற அந்த ஹிந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா..... இயக்குனர் பகிர்ந்த தகவல்!இந்நிலையில் ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தில் முதலில் நடிக்க நடிகர் சூர்யாவை தான் அணுகியுள்ளார். அவர் சூர்யாவை சந்தித்து படத்தின் கதையை கூறியதாகவும் ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் அப்படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் தற்போது ஒரு நேர்காணலில் ஸ்ரீராம் ராகவன் கூறியுள்ளார். சீட் எட்ஜ் திரில்லர் எனும் வார்த்தைக்கு மிகச் சிறந்த இலக்கணமாக இருந்த அந்தாதுன் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அவையும் ஹிட் படங்களாகவே அமைந்தன. மாபெரும் வெற்றி பெற்ற அந்த ஹிந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா..... இயக்குனர் பகிர்ந்த தகவல்!தமிழில் நடிகர் பிரசாந்த் “அந்தகன்” என்னும் பெயரில் உருவான இப்படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார். ஆனால் கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு விழா நாளுக்கும் ஸ்பெஷல் போஸ்டர் மட்டும் இப்படக் குழுவினரிடமிருந்து வெளி வருகிறது. ஆனால் படம்தான் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

MUST READ