spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா44 படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றடைந்த படக்குழு... சூர்யாவை காணத் திரண்ட கூட்டம்...

சூர்யா44 படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றடைந்த படக்குழு… சூர்யாவை காணத் திரண்ட கூட்டம்…

-

- Advertisement -
படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றடைந்த சூர்யாவை காண ரசிகர்கள் கூட்டம் விமான நிலையத்தில் திரண்டிருந்தது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

https://x.com/i/status/1796875814278967661

we-r-hiring
இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இதையடுத்து சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சூர்யா, ஜெயராம், பூஜா ஹெக்டே உள்பட அனைவரும் அந்தமான் தீவு சென்றடைந்தனர். அந்தமான் விமான நிலையம் சென்றடைந்த சூர்யாவை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

MUST READ