சூர்யா, எந்த கதாபாத்திரம் எடுத்துக் கொண்டாலும் தன்னை அக்கதாபாத்திரத்துக்குள் முழுமையாக பொருத்தி நடிப்பவர். இவருடைய நடிப்பில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. பழங்குடியின கதாநாயகனாக முரட்டு லுக்கில் சூர்யாவின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வட இந்திய மொழிகளிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதால் நாயகியாக திஷா பதானி, வில்லனாக பாபி தியோல் போன்ற பாலிவுட் பிரபலங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சூர்யா நேரடியாகவே ஒரு இந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். மகாபாரதத்தில் கிளை கதையான கர்ணனின் கதையை இந்தியில் படமாக்க உள்ளனர். ராகேஷ் ஓம் பிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இதிகாசப்படமாக உருவாகும் இப்படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கிறார்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை பான் இந்திய அளவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை நடிக்க வைக்க உள்ளனராம். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -