spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தலைவனே என் தலைவனே'.... சூர்யாவின் 'கங்குவா' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

‘தலைவனே என் தலைவனே’…. சூர்யாவின் ‘கங்குவா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

-

- Advertisement -

கங்குவா படத்திலிருந்து தலைவனே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.'தலைவனே என் தலைவனே'.... சூர்யாவின் 'கங்குவா' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு, கோவை சரளா, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கிறது. அதன்படி நடிகர் சூர்யா இந்த படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்காக முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர், ட்ரைலர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படத்திலிருந்து இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தலைவனே எனும் புதிய பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடல் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே திரையரங்குகளில் இந்த பாடல் இடம்பெறும் காட்சிகளில் விசில் சத்தம் விண்ணை பிளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ