சூர்யாவின் கருப்பு பட முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் 45 வது படமாக உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு விதமான லுக்கில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி வக்கீலாகவும், தெய்வத்தன்மை கொண்ட மனிதராகவும் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தன. இவருடன் இணைந்து திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.மேலும் இதன் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படும் நிலையில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 20) தீபாவளி தின ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து ‘GOD MODE’ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த பாடலில் விஷுவல்ஸ் அருமையாக இருக்கிறது. பிரம்மாண்டமான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சூர்யாவும் மாஸான தோற்றத்தில் மிரட்டுகிறார். சாய் அபியங்கரின் இசை அசத்தலாக அமைந்துள்ளது. தற்போது இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.