சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா இயக்குகிறார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இரண்டாவது முறையாக சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் கூட்டணி புறநானூறு படத்தில் இணைந்துள்ளது. இப்படம் 1950 காலகட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சூர்யா இந்தி திணிப்புக்கு எதிரான கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதே நாளில் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் சூர்யாவின் போர்ஷன் இன்னும் தொடங்கப்படவில்லையாம் . எனவே சூர்யா இல்லாத காட்சிகளை சுதா கொங்கரா படமாக்கி வருகிறாராம். விரைவில் சூர்யா புறநானூறு படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு சிதம்பரம், ஹரியானா போன்ற பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது.
- Advertisement -