Homeசெய்திகள்சினிமாசூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானூறு' டிராப்பா?..... திடீர் அறிக்கை எதற்காக?

சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் ‘புறநானூறு’ டிராப்பா?….. திடீர் அறிக்கை எதற்காக?

-

நடிகர் சூர்யா கங்குவா படத்தை முடித்துவிட்டு புறநானூறு படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானூறு' டிராப்பா?..... திடீர் அறிக்கை எதற்காக? இந்த படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். சூர்யாவிற்கு இது 43 வது படம் என்பதும் ஜிவி பிரகாஷுக்கு இது 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1950 காலகட்டங்களில் நடைபெறும் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதால் இந்த படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி, சிதம்பரம், ஹரியானா போன்ற பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான போதிலும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று இரவு 2D தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சூர்யா, சுதா கொங்கராவின் கையெழுத்திடப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானூறு' டிராப்பா?..... திடீர் அறிக்கை எதற்காக?அந்த அறிக்கையில் புறநானூறு படத்திற்கு அதிக நேரம் தேவைப்பட இருப்பதாகவும் ரசிகர்களுக்கு சிறந்ததை வழங்க பணியாற்றி வருவதாகவும் நடிகர் சூர்யா புறநானூறு தாமதத்திற்கான காரணத்தை தெரிவித்திருந்தார். இருப்பினும் திடீர் அறிக்கை ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி சூர்யாவிற்கும் சுதா கொங்கராவிற்கும் இடையில் புறநானூறு ஸ்கிரிப்ட் காரணத்தால் சிறிய கருத்து வேறுபாடு இருப்பதாகவும் இதனால் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. மற்றொரு தரப்பில், இல்லை புறநானூறு படம் நிச்சயம் வரும், அதற்கிடையில் சூர்யா வேறொரு படத்தில் நடிக்க திட்டமிட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இனிவரும் நாட்களில் புறநானூறு படம் தொடங்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ