சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க திஷா பதானி கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக பாபி, தியோல் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை பற்றி சிறுத்தை சிவா பேசியுள்ளார். அதன்படி, “இந்திய சினிமாவில் வெளியான படங்களில் கதாநாயகன் முதலையுடன் சண்டை போடும் காட்சி இருக்கிறதா? என்பதை ஆராய்தோம். பெரிதாக எந்த படத்திலும் இது போன்ற காட்சிகள் இடம் பெற்றதாக தெரியவில்லை. நானும் இதுவரை பார்த்ததில்லை. அதனால்தான் கங்குவா படத்தில் சூர்யா முதலையுடன் சண்டை போடும் காட்சியை உயிர்ப்புடன் பிரம்மாண்டமாக எடுக்க முடிவு செய்தோம். தண்ணீருக்குள் ஏழு நாட்கள் அந்த காட்சியை படமாக்கப்பட்டது. அந்த காட்சி Man Vs Beast மாதிரி பேசப்படும்” என்று தெரிவித்துள்ளார்.