spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..... கங்குவா ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்!

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்….. கங்குவா ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க சிறுத்தை சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படம் ஒரு வரலாற்று சரித்திர படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் சென்னை பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. தற்போது 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ஸ் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் சூர்யா காட்டுத் தனமான லுக்கில் மிரள வைத்துள்ளார்.கங்குவா என்பது நெருப்பு மகன் என்று பொருள் படும். அதற்கு ஏற்றார்போல் சூர்யாவின் பார்வை நெருப்பாய் சுட்டெரிக்கிறது. தற்போது ரசிகர்கள் இந்த கிளிப்ம்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளில் டபுள் ட்ரீட் அளிக்கும் விதமாக கங்குவார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மாலை 5 மணி அளவில் படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

MUST READ