spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகங்கா... கங்கா... கங்குவா.... படத்தின் முக்கிய அப்டேட்!

கங்கா… கங்கா… கங்குவா…. படத்தின் முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு வரலாற்று சரித்திர படமாக உருவாகி வருகிறது. அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் ஜப்பானிய சீன கொரிய மொழிகளிலும் கூட டப்பிங் செய்யப்பட இருக்கிறது. இவ்வாறாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ஸ் சமீபத்தில் சூர்யா பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படப்பிடிப்புகள் கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்தது.

we-r-hiring

இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளன. இதைத்தொடர்ந்து ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
பாங்காக்கிலும் படப்பிடிப்பை தொடர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் சூரியாவின் போர்ஷன் முழுமையாக நிறைவடைய உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிறகு இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு சூர்யா தனது 43வது படத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

MUST READ