ஃபைட் கிளப் திரைப்படமானது கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியானது. உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இதில் இவருடன் இணைந்து சங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும் , ரீல் குட் ஃபிலிம் நிறுவனமும் இணைப்பை தயாரித்துள்ளது.
போதைப் பொருள் சம்பந்தமான கதை களத்தில் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அரசியல் ,அதிரடி என முதல் பாதி சுவாரசியமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சற்று திகட்டும் அளவில் இருந்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்திருந்தது. விஜயகுமார் சிறப்பாக நடித்து ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டி இருந்தார். இருந்தபோதிலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
.#FightClub a stylised, gritty, raw action film. Loved @Vijay_B_Kumar as Selva!! Good job debut Director @Abbas_A_Rahmath and young team of technicians 👏🏽
— Suriya Sivakumar (@Suriya_offl) December 16, 2023
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபைட் கிளப், ஸ்டைலிஷான அட்டகாசமான ஒரு அதிரடி திரைப்படம். விஜயகுமார் செல்வா வாக நடித்திருந்ததை நான் ரசித்தேன். அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ஆர் ரஹ்மத் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.