spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் '2K லவ் ஸ்டோரி' படத்தின் டீசர் வெளியீடு!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியீடு!

-

- Advertisement -
kadalkanni

2K லவ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் '2K லவ் ஸ்டோரி' படத்தின் டீசர் வெளியீடு!இவர் கடந்த 2009இல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு எனும் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் நான் மகான் அல்ல, பாயும் புலி, மாவீரன் கிட்டு, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக இவரது இயக்கத்தில் குற்றம் குற்றமே எனும் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர் நடிகராகவும் உருவெடுத்து மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மார்கழி திங்கள் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சுசீந்திரன். இந்நிலையில் இவர் 2K லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் ஜெகவீர் மற்றும் மீனாட்சி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் வினோதினி, பால சரவணன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ