spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் தமிழில் நடிக்கும் டாப்ஸி...... சயின்ஸ் ஃபிக்ஷனில் உருவாகும் புதிய படம்!

மீண்டும் தமிழில் நடிக்கும் டாப்ஸி…… சயின்ஸ் ஃபிக்ஷனில் உருவாகும் புதிய படம்!

-

- Advertisement -

நடிகை டாப்ஸி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் ஆரம்பம், வந்தான் வென்றான், கேம் ஓவர், காஞ்சனா 2, அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

தற்போது இவர் தமிழில் ஏலியன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை K 13 படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஒன் இந்தியா படமாகவும் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்திலும் இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏலியன் எப்படி இந்தியாவில் வாழ்கிறது என்பதை கூறுவதே படத்தின் மையக்கருவாகும். இந்த படம் மிக பிரம்மாண்டமாக ஹை பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. வி எஃப் எக்ஸ் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ