- Advertisement -
தமன்னா நடிக்கும் புதிய திரைப்படம் மற்றும் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழில் வில்லியாக அறிமுகமாகி இன்று ரசிகர்களின் மனதை தன் நடிப்பாலும், அழகாலும் சித்திரவதை செய்யும் நாயகி தமன்னா. கேடி படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவரது நடிப்பு மிகவும் ஆக்ரோஷமாகவும், முதிர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டினார். தனது அடுத்த திரைப்படமான கல்லூரியில், மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டினார். இப்படம் பெரும் ஹிட் அடிக்கவே தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.


தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்து தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கும் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், வெங்கடேஷ், சிரஞ்சீவி என அனைத்து டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளன. நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் வில்லாதி வில்லி நடிகை தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்த தமன்னா இந்தியிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே , நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.



