Homeசெய்திகள்சினிமாமீண்டும் குத்து பாடலுக்கு நடனமாடும் தமன்னா!

மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாடும் தமன்னா!

-

- Advertisement -

நடிகை தமன்னா மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாடும் தமன்னா!நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் பையா, அயன், வீரம் ஆகிய படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஒடேலா 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் கலக்கியது. மேலும் இவர் நடனமாடியிருந்த காவலா பாடல் தான் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அதைத்தொடர்ந்து இவர் ஸ்த்ரீ 2 படத்திலும் நடனமாடியிருந்தார். மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாடும் தமன்னா!அதன் பின்னர், தொடர்ந்து குத்து பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்து வருவதால் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகை தமன்னா மீண்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட உள்ளார் என தகவல் கசிந்துள்ளது. அதன்படி அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ரெய்டு 2 படத்தில் குத்து பாடலுக்கு நடனமாட உள்ளார் என சொல்லப்படுகிறது. அடுத்தது நடிகை தமன்னாவுக்கு இந்த பாடலில் நடனம் ஆடுவதற்காக ரூ.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்தப் படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுவாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

MUST READ