- Advertisement -
கோலிவுட்டின் முக்கிய முகங்களில் ராஜ்கிரணும் ஒருவர். பழைய திரைப்படங்களில் அவர் கறி சாப்பிடும் அழகிற்கே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அன்று ஹீரோவா நடித்துக் கொண்டிருந்த ராஜ்கிரண், தற்போது தந்தை வேடங்களிலும், தாத்தாவாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ராஜ்கிரணுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பெயர் ஜீனத் பிரியா. இவர், நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரில் நடித்த முனீஸ் ராஜாவை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

மகளின் ரகசிய திருமணத்தை எதிர்த்த நடிகர் ராஜ்கிரண், இனி ஜீனத் தனது சொந்த மகள் இல்லை என்றும், அவர்கள் இருவரும் தன் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை விட்டிருந்தார். இதையடுத்து கணவர் ராஜ்கிரண் தொடர்பாக அவதூறு பரப்புவதாக, ராஜ்கிரணின் மனைவி பத்மஜோதி, தனது மகள் ஜீனத் மீது புகார் அளித்தார். இந்த பிரச்சனை பல மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.




