Homeசெய்திகள்சினிமாதமிழில் ஆவேஷம் திரைப்படம்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...

தமிழில் ஆவேஷம் திரைப்படம்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
kadalkanni
தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் ஆவேஷம் திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வௌியாக உள்ளது.

இன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். மலையாளத்தில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் ஃபகத், தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து வேலைக்காரன், விக்ரம், இறுதியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாமன்னன் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ரத்னவேலு கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இது தவிர, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ரஜியின் கூலி படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் அவரது நடிப்பில் மலையாளத்தில் வௌியான திரைப்படம் ஆவேஷம். இப்படத்தை ஜித்து மாதவன் இயக்க, மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த ஏப்ரபல் 11-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஆவேஷம் திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் நாளை மறுநாள் ஜூன் 21-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வௌியாகிறது.

MUST READ