- Advertisement -
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கூடிய கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படத்திற்கான மானியம் மற்றும் சின்னத்திரை விருதகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோலாகலமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்தி வரும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஏற்கனவே கடந்த 8-ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் 2019-முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள், 2018 முதல் 2022 வரை சிறிய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட தரமான திரைப்படங்களுக்கு அரசு மானியம், 2015 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் சின்னத்திரை தொடர்களில் சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொடர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.



