spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸை மிஸ் பண்ணிட்டீங்களா.... உங்களுக்காக இதோ!

சித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸை மிஸ் பண்ணிட்டீங்களா…. உங்களுக்காக இதோ!

-

- Advertisement -

சித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸ்:

மதராஸிஅடுத்த வெற்றிக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்.... 'மதராஸி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

we-r-hiring

சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார் அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஏ.ஆர். முருகதாஸின் மற்ற படங்களை போல் கமர்சியல் படமாக உருவாகும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்றுதான் விஜயின் கோட் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

குபேராசித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸை மிஸ் பண்ணிட்டீங்களா.... உங்களுக்காக இதோ!

தனுஷின் 51வது படமாக உருவாகும் குபேரா திரைப்படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் இன்று (ஏப்ரல் 15) இப்பாடலின் ப்ரோமோ வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டள்ளது. இந்த படத்தை சேகர் கக்முலா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமன்சித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸை மிஸ் பண்ணிட்டீங்களா.... உங்களுக்காக இதோ!

நடிகர் சூரி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்போது இவர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்த படம் வருகின்ற மே 16 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்ட தலசித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸை மிஸ் பண்ணிட்டீங்களா.... உங்களுக்காக இதோ!

வணங்கான் படத்திற்கு பிறகு அருண் விஜய் ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். நேற்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இடி முழக்கம்சித்திரை திருநாள் சினிமா அப்டேட்ஸை மிஸ் பண்ணிட்டீங்களா.... உங்களுக்காக இதோ!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள திரைப்படம் தான் இடி முழக்கம். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் 2025 மே மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 14) சித்திரை திருநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

STR 49

சிம்பு நடிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாய் அபியங்கர் இந்த படத்தின் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என நடிகர் சிம்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

MUST READ