Homeசெய்திகள்சினிமாதேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!

தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!

-

தெலுங்கு நடிகை அனுசுயா தேம்பித் தேம்பி அழுது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பின் தெலுங்கு படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுசுயா பரத்வாஜ்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் இவரை அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தியது. அனுசுயா தொடர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்ததால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் எல்லை மீறி கமெண்ட் செய்த ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று அவர் செய்த கமெண்டும் பேசும் பொருளானது. இதற்கிடையில் கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவை விமர்சித்து அனுசுயா வெளியிட்ட பதிவு அவரது ரசிகர்களை கோபப்படுத்தியது. அது முதல் அனுசூயாவை ட்ரோல் செய்யும் கூட்டணியில் விஜய் தேவரகொண்டா ரசிகர்களும் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பல ட்ரோல்களுக்கு ஆளாகி வருகிற அனுசுயா தான் தேம்பித் தேம்பி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

சமூக வலைதளங்களை நமது கருத்துக்களை உலக மக்களிடம் பகிர்ந்து கொள்ள தான் நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்றைக்கு எப்போது எப்படி பயன்படுத்தி வருகிறோம் என்று நினைக்கும் போது மனக்குமுறலாக இருக்கிறது. நான் இப்போது எனது வாழ்க்கையின் மோசமான கட்டத்தில் இருக்கிறேன். எனக்கும்  உணர்வுகள் இருக்கின்றன. தொடர்ந்து போராடி வருகிறேன். மோசமான காரியங்களை செய்யும் முன், அவர்களது மனநிலை பற்றி யோசியுங்கள் அனைவரும் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றவாறு அந்த பதிவை வெளியிட்டுள்ளார்

MUST READ