ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது கிட்டத்தட்ட அது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் பகத் பாஸில், மஞ்சு வாரியர், சர்வானந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ரஜினி இந்த படத்தில் முஸ்லிமாகவும், போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பிறகு படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


