தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய புதுவிதமான கதை சொல்லும் யுக்தி பல இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் ,அடுத்ததாக கார்த்தியை வைத்து எடுத்த “கைதி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமானார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ என பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்தார். இதில் விக்ரம்,லியோ படங்கள் அந்தந்த ஆண்டுகளில் இண்டஸ்ட்ரி ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ,சுமார் 627 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். மேலும் இவர் உருவாக்கிய “லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்” க்குள் தலைவர் 171 படம் வருமா எனப் பலரும் கேட்டு வந்தனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் தரப்பு இதனை முழுமையாக மறுக்கவில்லை, அதே சமயம் இதுவரை லோகேஷ் படங்களில் பணியாற்றாத நடிகர்களே இப்படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் 171 மாஸான படமா? அல்லது கிளாஸான படமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த லோகேஷ் நிச்சயமாக தலைவர் 171 ஒரு மாஸான படம் தான். ரஜினிக்காகவே உருவாக்கப்பட்ட மாஸான படமாக இது இருக்கும். மேலும் லோகேஷின் படங்களில் வழக்கமாக இருக்கும் போதை மருந்து தொடர்பான கதையாக இது இருக்காது என்றும் முழுக்க முழுக்க ஆக்சன் படமாகத்தான் உருவாக உள்ளது என்றும் கூறியுள்ளார் லோகேஷ். அன்பறிவு மாஸ்டர்ஸ் தான் இப்படத்திற்கும் சண்டை காட்சிகளை இயக்குகின்றனர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாகவே உள்ளது. ரஜினியை நாம் இதுவரை பல அவதாரத்தில் பார்த்துள்ளோம். லோகேஷ் அவரை எந்த மாதிரியான ஆக்சன் அவதாரத்தில் காட்டுவார் என்று காண ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.
- Advertisement -


