தளபதி 69 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தற்போது பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது விஜயின் 69 ஆவது படம் என்பதால் இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஐதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்திற்குள் நடிகர் விஜய், தளபதி 69 படத்தில் தனது போர்ஷன்களை நிறைவு செய்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.
இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அடுத்தது இந்த படம் 2025 அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.