spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதம்பி ராமையா மகன் நடிக்கும் 'பித்தல மாத்தி'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தம்பி ராமையா மகன் நடிக்கும் ‘பித்தல மாத்தி’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

பிரபல நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். தம்பி ராமையா மகன் நடிக்கும் 'பித்தல மாத்தி'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!அதன்படி ஏற்கனவே அதாகப்பட்டது மகாஜனங்களை , மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ள உமாபதி ராமையா ராஜகிளி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் உமாபதி ராமையா, பித்தல மாத்தி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் உமாபதி ராமையா தவிர தம்பி ராமையா, பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் காமெடி கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ளது.
மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் ஆனது ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி உள்ளது.தம்பி ராமையா மகன் நடிக்கும் 'பித்தல மாத்தி'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 14 உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ