- Advertisement -
தமிழ் திரையுலகில் ஹேட்டர்ஸே இல்லாத ஒரு நாயகன் என்றால் அது சியான் தான். சியான் என கொண்டாடப்படும் விக்ரம் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக பொன்னியன் செல்வன் திரைப்படங்கள் வெளியாகின. கரிகால சோழனாக விக்ரம் நடித்து பாராட்டைப் பெற்றார். விக்ரம் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போகிறது.

மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது.




