spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் புதிய மெடிக்கல் திரில்லர் படம்!

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் புதிய மெடிக்கல் திரில்லர் படம்!

-

- Advertisement -

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் அறிமுகமானவர்.

மேலும் இவர் விஜய் சேதுபதியின் கருப்பன், அருள் நிதியின் பிருந்தாவனம், அதர்வாவின் ட்ரிகர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

தற்போது இவர் ‘BP 180’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஜே பி இயக்குகிறார்.
இந்தப் படத்தை அதுல் இந்தியா மூவிஸ் மற்றும் எம் போஸ்மியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரனுடன் டேனியல் பாலாஜி, அருள்தாஸ், பாக்கியராஜ், தமிழ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

அப்போது படம் குறித்து பேசிய இயக்குனர் ஜே பி “இந்த படம் ஒரு மெடிக்கல் திரில்லர் படமாகும். ஒரு அரசாங்க மருத்துவருக்கும் மீனவர் சங்கத் தலைவருக்கும் இடையே நடக்கும் கதை ஆகும். இதில் நடிகை தானியா அரசாங்கம் மருத்துவராகவும் டேனியல் பாலாஜி மீனவர் சங்கத் தலைவராகவும் நடிக்கிறார்கள்.
BP என்று கூறப்படும் ரத்த அழுத்தம் 180 அளவுகளை தாண்டி விட்டால் மிகவும் ஆபத்தானது. ஆதலால் இந்த படத்திற்கு BP 180 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் புதுச்சேரியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க உள்ளது” என்று கூறியுள்ளார்.

MUST READ