இயக்குனர் சிறுத்தை சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை என்ற படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து அஜித்தின் வீரம், வேதாளம், விஸ்வாசம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். இருப்பினும் கடைசியாக இவர் இயக்கியிருந்த அண்ணாத்த திரைப்படம் சரியான வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா எனும் பீரியாடிக் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் 3D தொழில்நுட்பத்தில் ஹை பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராக வருகிறது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சிறுத்தை சிவாவிடம், “கங்குவா படத்திற்கு ஏன் தேவி ஸ்ரீ பிரசாத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிறுத்தை சிவா, “தேவி ஸ்ரீ பிரசாத் வீரம் படத்தில் சூப்பர் ஹிட் பாடலை கொடுத்திருந்தார். எல்லா பாடலும் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக வீரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்’ எனும் பிஜிஎம் பாடல் போர்க்களம் பற்றி இருக்கும். எனவே கங்குவாவை பொருத்தவரை போர்க்காட்சிகள் அதிகம் இருக்கின்ற காரணத்தால் தேவி ஸ்ரீ பிரசாத் தான் சரியான தேர்வு என்று நினைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -