நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். இவர் ரஜினி, விஜய், சூர்யா, அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக், ஹாய் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் 9 ஸ்கின் எனும் ஸ்கின் கேர் நிறுவனத்தையும், ஃபெமிநைன் எனும் நாப்கின்ஸ் பிசினஸையும் தொடங்கி ஒரு தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தான் 9 ஸ்கின் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக ஸ்கின்ட்ரெல்லா எனும் ஸ்கின் கேர் ப்ராடக்ட் ஒன்றை அறிமுகப்படுத்தும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்ட போது மேடையின் கீழ் இருந்த மூன்று பெண் ரசிகைகள் நயன்தாராவுடன் புகைப்படம் எடுக்க விரும்பி தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது நயன்தாரா அவர்களின் தயக்கத்தை புரிந்துகொண்டு அவர்களை அழைத்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனால் அந்த மூன்று ரசிகைகளும் மிகுந்த உற்சாகத்தில் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -