Homeசெய்திகள்சினிமாநாளை நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்......சேனாபதி ஸ்டைலில் அழைப்பு விடுத்த படக்குழு!

நாளை நடைபெறும் ‘இந்தியன் 2’ ஆடியோ லான்ச்……சேனாபதி ஸ்டைலில் அழைப்பு விடுத்த படக்குழு!

-

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் கூட்டணி இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து இணைந்துள்ளதால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாகவே இருந்து வருகிறது. நாளை நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்......சேனாபதி ஸ்டைலில் அழைப்பு விடுத்த படக்குழு!அதேசமயம் பல வருடங்களாக இந்த படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் , ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் முதல் பாடலான பாரா எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் நீலோற்பம் எனும் பாடலும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னை, நேரு அரங்கில் நாளை மாலை 6 மணி அளவில் (ஜூன் 1 அன்று) நடைபெற இருக்கிறது.நாளை நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்......சேனாபதி ஸ்டைலில் அழைப்பு விடுத்த படக்குழு! இவ்விழாவிற்கு சிரஞ்சீவி, ராம்சரண், ரஜினி போன்ற பல ஸ்டார் நடிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவிற்கு சேனாபதி (இந்தியன் தாத்தா) ஸ்டைலில் படக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது இசை வெளியீட்டு விழாவிற்காக ஏற்பாடு செய்த அழைப்பிதழ்கள் இந்தியன் தாத்தாவின் கத்தி, பெல்ட் போன்றவைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

MUST READ