விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபெற்று வரும் திரைப்படம் தான் மகாராஜா. எமோஷனல் காட்சிகளும் வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் வெற்றி பாதையில் பயணம் செய்கிறது. சமீபகாலமாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை வரவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. பல்வேறு தரப்பினரிடையே இந்த படம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக விஜய் ஆண்டனி தான் நடிக்க இருந்தாராம். அதே சமயம் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் அந்த கதை தங்களுக்கு பிடித்திருந்ததாகவும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
#Maharaja movie was initially to be done by #VijayAntony, but later on it moved to #VijaySethupathi as passion studios has already signed the project with Director pic.twitter.com/NToUQQfAFz
— AmuthaBharathi (@CinemaWithAB) June 16, 2024
ஆனால் நித்திலன் அதற்கு முன்பாகவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கதையை கூறி அட்வான்ஸ் பெற்றுக் கொண்டதாக சொல்லிவிட்டாராம். மேலும் விஜய் சேதுபதியிடம் கதையை சொல்லி விட்டதாகவும் அவர் நோ சொல்லிவிட்டால் விஜய் ஆண்டனியை நடிக்க வைப்பதாகவும் நித்திலன் சொன்னாராம். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.