விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது பொன்னியின் செல்வன் பாகம்1. அப்படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

அதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று பட குழு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. இதில் அந்த படத்தில் நடிக்கும், அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், தற்பொழுது இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ. ஆர். ரகுமான் படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.