- Advertisement -
வசந்த் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்திரா திரைப்படத்தின் முதல் தோற்றம் வௌியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வசந்த் ரவி. புகழ் பெற்ற நம்ம வீடு வசந்தபவன் ஹோட்டலின் உரிமையாளர் முத்து கிருஷ்ணனின் மகனான வசந்த் ரவி இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். பின்னர் நடிப்பு மீது வந்த ஆர்வத்தால் 2017-ம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கத்தி்ல வெளியான தரமணி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பார். இப்படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்திருந்தார். தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும் வசந்த் ரவிக்கு கிடைத்தது.
