spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு!

‘தி கோட்’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

தி கோட் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.''தி கோட்' படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தமிழ்நாட்டையும் தாண்டி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக வருகின்ற செப்டம்பர் 5 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ரசிகர்கள் பலரும் படம் தொடர்பாக வெளிவரும் அனைத்து அப்டேட்டுகளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே படத்தின் முன்னோட்டம், போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்ததாக தி கோட் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அற்புதமான ட்ரெய்லரை வழங்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். எனவே தற்போதைக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் படத்தில் நடித்துள்ள அனைவரும் காட்டப்பட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 18 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ