தி கோட் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் உருவான நிலையில் இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று சொல்லப்படும் தி கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதும் இதற்கு காரணம். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன், சினேகா என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருப்பதும் இதன் எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமாகும்.
GET . SET . GOat 🔥
Buckle up.. #TheGoatTrailer is landing on your screens on August 17th, 5 PM 💥@actorvijay SirA @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production… pic.twitter.com/U5tq4XBNCj— AGS Entertainment (@Ags_production) August 15, 2024
இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை. எனவே படத்தின் டிரைலரை எப்படியாவது சிறந்ததாக கொடுக்க வேண்டும் என்று பட குழுவினர் முயற்சித்து வருகின்றனர். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 17 அன்று தி கோட் படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் 2024 செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.