spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோட் பட பாடலில் பவதாரணி குரல்... காரணம் இதுதானா?...

கோட் பட பாடலில் பவதாரணி குரல்… காரணம் இதுதானா?…

-

- Advertisement -
இந்திய திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகள் பவதாரணி. இவர் திரையுலகில் பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான அவர், ரேவதி இயக்கிய படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கோலிவுட்டில் பல பாடல்கள் பாடி இருக்கிறார்.
 இதனிடையே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 25ம் தேதி இலங்கை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஒட்டுமொத்த இசை உலகமும் சோகத்தில் ஆழ்ந்தது. அவர் சிகிச்சையில் இருந்தபோது, கோட் படத்தில் சின்ன சின்ன கண்கள் பாடலை, பவதாரணியை வைத்து பாட வைக்கலாம் என யுவன் சங்கர் ராஜாவும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் முடிவு செய்திருந்தனராம். சிகிச்சை முடிவடைந்து, பவதாரணி வந்ததும் அவரை வைத்து ரெக்கார்டிங் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், ஏற்கனவே முடிவு செய்தபடி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சின்ன சின்ன கண்கள் பாடலில் அவரது குரலை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் விஜய் நாயகனாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் பாடிய சின்ன சின்ன கண்கள் பாடல் நேற்று அவரது பிறந்தநாளை ஒட்டி வௌியானது.

MUST READ