spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதி கிரேட் இந்தியன் கிச்சன்; நாளை ஓடிடியில் வெளியீடு

தி கிரேட் இந்தியன் கிச்சன்; நாளை ஓடிடியில் வெளியீடு

-

- Advertisement -

தி கிரேட் இந்தியன் கிச்சன்; நாளை ஓடிடியில் வெளியீடு

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் நாளை பிரபல ஓடிடி தளத்தில் வௌியாகிறது

2021-ஆம் ஆண்டு ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் ஆகியோர் நடிப்பில் மலையாள மொழியில் உருவான திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்‘. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

we-r-hiring
தமிழில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக்

இதையடுத்து தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். மேலும், சுராஜ் வேடத்தில் ராகுல் ரவீந்திரன் நடித்து இருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து உள்ளது.

MUST READ