Homeசெய்திகள்சினிமாவிஜய் நடிக்கும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்?..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் நடிக்கும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்?….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

விஜய் நடிக்கும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்?..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஜய் நடிக்கும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்?..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர். அதேசமயம் இந்த படத்தில் நடிகர் விஜய்யை டி ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளமையாக காட்ட இருக்கிறார் வெங்கட் பிரபு. அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த்தையும் AI தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்த் விஜய்யுடன் இணைந்து ஒரு சண்டைக்காட்சியில் காட்டப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.விஜய் நடிக்கும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்?..... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் விஜயகாந்த், ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து விஜய், சினிமா துறையில் முன்னேற உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ