மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் – அஜித் காம்போவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து இவருக்கு விஜய், கமல், ரஜினி ஆகியோரை இயக்கும் வாய்ப்பு கிடைக்க மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். இருப்பினும் கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மாறாக பலரும் லோகேஷ் கனகராஜை ட்ரோல் செய்து வந்தனர்.
எனவே அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ், ‘கைதி 2’ படத்தை இயக்கி தரமான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ள லோகேஷ் தற்போது ‘DC’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களை இயக்கும் லோகேஷ், அஜித்தை எப்போது இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி அஜித்துடன் நிச்சயம் படம் பண்ணுவேன் என்று லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 10 மாதங்களுக்கு முன்னரே லோகேஷ் கனகராஜ், அஜித்திடம் கதை சொன்னாராம். தற்போது அது இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையினால் இனிவரும் நாட்களில் நிச்சயம் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்போவை திரையில் பார்த்துக் கொண்டாட ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக கைதி 2, விக்ரம் 2 என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் பவன் கல்யாணுடன் புதிய படம் பண்ணப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. எனவே அஜித்துடன் அவர் கைகோர்க்கும் புதிய படம் எப்போது நடக்கும்? என்பது தொடர்பான தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


